காவிரி தீர்ப்பு: தமிழக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டது - தங்க தமிழ்ச்செல்வன்
காவிரி தீர்ப்பில் தமிழக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டது என்று மானாமதுரையில் நடந்த டி.டி.வி.தினகரன் அணி ஆலோசனை கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
மானாமதுரை,
மானாமதுரையில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். ஜெ.பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட செயலாளர் உமாதேவன், முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிசாமி, சிவகங்கை முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், பொருளாளர் வக்கீல் சக்தி, ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நகர செயலாளர் கோபால், இளையான்குடி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவநேசன், அண்ணாமலை, சீமாட்டி ஜோசப், நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு அளித்தது. அதில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்ததுடன், கர்நாடகத்திற்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினை தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை. அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சரியாக கையாளவில்லை. இதன்மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டது. டி.டி.வி.தினகரன் முதல்-அமைச்சராக இருந்திருந்தால் காவிரி தீர்ப்பு சாதகமாக அமைந்திருக்கும். காவிரி பிரச்சினையில் தமிழகம் சார்பில் உரிய வாதங்களை அரசு வக்கீல் எடுத்துரைக்கவில்லை என நீதிபதிகளே தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story