டிரைவர் மர்ம சாவு விசாரணை நடத்த கோரி உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்


டிரைவர் மர்ம சாவு விசாரணை நடத்த கோரி உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:15 AM IST (Updated: 18 Feb 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே தாதம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மதுரையில் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்த கோரி உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை ஒன்றியம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 35). லாரி டிரைவரான இவர் கடந்த வாரம் கரூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமான லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு சென்றார். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே மர்மமான முறையில் நந்தகுமார் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின்னர்் நந்தகுமாரின் உடலை அவரின் உறவினர் களிடம் ஒப்படைத்தனர். அங்கு உடலை பெற்றுக் கொண்டு தாதம்பட்டிக்கு வந்த உறவினர்கள் நந்தகுமாரின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவரது இறப்பிற்கு லாரி உரிமையாளர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கேட்டு நந்தகுமாரின் உடலை தாதம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே முசிறி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைந்து சென்றனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீசார், நந்தகுமார் இறப்பு குறித்து மதுரையில் உரிய விசாரணை நடந்து வருகிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள்போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story