காதல் திருமணம் செய்த இளம்பெண் வங்காளதேசத்தில் மர்ம சாவு: கடைசியாக முகத்தை பார்க்க வாய்ப்பு தாருங்கள் பெற்றோர் கண்ணீர் மனு
அவினாசி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளதேசத்தில் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவருடைய உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய மந்திரிகளுக்கு, பெற்றோர் மனு அனுப்பி உள்ளனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் தம்பதிகள் வங்காளதேசம் சென்று விட்டனர். அங்கு பூர்ணாதேவி இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள அவருடைய பெற்றோர் பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் மகளின் நினைப்பில் பூர்ணாதேவியின் பெற்றோர் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பூர்ணாதேவியின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட ரிமுஷேக், பூர்ணாதேவி உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்து விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் மகளின் நிலைமை குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுத பூர்ணாதேவியின் பெற்றோர் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவை அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் விசாரணை நடத்தினார். இது குறித்து வளவன் கூறும்போது “ரிமுஷேக் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.
ஆனால் தற்போது வங்காளதேசத்தில் வசித்து வருகிறார். பூர்ணாதேவிக்கு என்ன நடந்தது என்று ரிமுஷேக்கை விசாரித்தால் மட்டுமே உண்மை நிலை தெரியும். மேலும் இதுநாடு கடந்த பிரச்சினை என்பதால் இந்திய தூதரகம் மூலம் மட்டுமே அணுக முடியும். எனவே இன்னும் ஓரிருநாளில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதற்கிடையில் பூர்ணாதேவியின் பெற்றோர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுடைய ஒரே மகள் பூர்ணாதேவி. கருவலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2015-ம் ஆண்டு பிளஸ்-2 படித்தார். எங்களது குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பூர்ணாதேவியை அதற்கு மேல் படிக்க வைக்க எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. இதனால் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அந்த பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதன்பின்னர் காதலர்கள் இருவரும் கடந்த 20.7.2016 அன்று தலைமறைவானார்கள். இதையடுத்து நாங்களும், எனது உறவினரும் பூர்ணதேவியையும், ரிமுஷேக்கையும் பல்வேறு இடங்களில் தேடி னோம். ஆனால் எங்கு தேடியும் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து எனது மகளை கண்டு பிடித்து தரும்படி 23.7.2016 அன்று அவினாசி போலீசில் புகார் கொடுத்தோம். புகார் கொடுத்து ஓராண்டு ஆகியும் எங்களது புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன்பின்னர் எங்களை தொடர்பு கொண்ட ரிமுஷேக், பூர்ணாதேவியை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகு பூர்ணாதேவி இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாகவும், இதையடுத்து பூர்ணாதேவி என்ற பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டு வங்காளதேசத்தில் வசித்து வருவதாகவும் கூறினார்.
அதன்பின்னர் வங்காளதேசத்தில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வருவதற்கு பலமுறை முயற்சி செய்தோம். அதற்கு உண்டான போக்குவரத்து செலவுக்கு கூட ரூ.10 ஆயிரத்தை ரிமுஷேக் வங்கி கணக்கில் செலுத்தினோம். அதன்பின்னரும் பூர்ணாதேவி திருப்பூருக்கு வருவது தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 9.2.2018 அன்று ரிமுஷேக் எங்களை தொடர்பு கொண்டு, பூர்ணாதேவி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகவும், இதனால் அவருடைய உடலை எரித்து விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் ரிமுஷேக் கூறும் காரணம் நம்பும்படியாக இல்லை. எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தோம். அப்போது அவர்கள் இது குறித்து மத்திய வெளிவிவகாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். பல்வேறு தகவல்கள் அடிப்படையில் எனது மகள் வங்காளதேசத்தில் சந்தேகமான முறையில் இறந்து இருப்பதாகவும், அவளுடைய உடலை வங்காள தேச போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே எனது மகள் உயிருடன் இருக்கிறாளா? இல்லையா? என்று தெரியவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது மகள் உடலை எங்களது கிராமமான வேலாயுதம்பாளையத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரிமுஷேக் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பூர்ணாதேவியின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது மகள் எங்களை விட்டு சென்று 1½ ஆண்டுகள் ஆகிறது. வங்காள தேசத்தில் அவள் இருக்கும் முகவரியை கூட தெரிந்து கொள்ள முயன்றும் எங்களால் முடியவில்லை. இதற்கிடையில் எங்களை தொடர்பு கொண்ட பூர்ணாதேவியின் மாமனார் எனது மகள் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். மேலும் தாங்கள் அனுப்பிய ரூ.10 ஆயிரம் கிடைத்து விட்டதாகவும், 10 நாட்களில் பூர்ணாதேவி அங்கு வந்து விடுவதாகவும் கூறினார். ஆனால் 10 நாட்கள் கடந்தும் வரவில்லை. அதன்பின்னர் 2 மாதங்களுக்கு பிறகு கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரியவந்தது. பின்னர் மீண்டும் பணம் அனுப்புமாறு கூறினார்கள். மீண்டும் பணம் அனுப்பி வைத்தோம்.
எனது மகள் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து எங்களிடம் ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு உங்கள் மகள்தான் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக ரிமுஷேக் தெரிவித்தார். மேலும் உங்கள் மகள் உடலை வாங்க வருகிறீர்களா? அல்லது நாங்களே எரித்து விடட்டுமா? என்று ஈவு இரக்கமின்றி பதில் கூறினார். எனது மகளை வேலைக்கு அனுப்பி கொடுமை படுத்தியதுடன், அடித்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே எங்களது மகள் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசியாக அவளது முகத்தை பார்க்க வாய்ப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story