எடியூரப்பாவின் ஆதரவாளருக்கு அதிக வாய்ப்பு சிவமொக்கா நகர தொகுதியில் ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கிடைக்குமா?
சிவமொக்கா நகர தொகுதியில் போட்டியிட எடியூரப்பாவின் ஆதரவாளருக்கு அதிகவாய்ப்பு இருப்பதால், ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு,
சிவமொக்கா நகர தொகுதியில் போட்டியிட எடியூரப்பாவின் ஆதரவாளருக்கு அதிகவாய்ப்பு இருப்பதால், ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கொதிப்படைந்த ஈசுவரப்பாவின் ஆதரவாளர்கள் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தலைவர்கள் மும்முரமாக...
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா சிவமொக்கா நகர தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளார். இவர் பா.ஜனதா சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதே தொகுதியில் கர்நாடக ஜனதா சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ருத்ரேகவுடா போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் எடியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். சிவமொக்காவில் நிர்வாகிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இதில் கலந்துகொண்ட நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள், ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கொடுத்தால் அவர் தோற்பது உறுதி என்றும், ருத்ரேகவுடா நிறுத்தப்பட்டால் அவர் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எடியூரப்பாவின் ஆதரவும் ருத்ரேகவுடாவுக்கு இருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த எடியூரப்பா, யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று கூறினார்.
கருத்துவேறுபாடு
ஏற்கனவே எடியூரப்பா மற்றும் ஈசுவரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் அது சரிசெய்யப்பட்டது. சிவமொக்கா நகர தொகுதியில் போட்டியிட ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்து உள்ளனர். பா.ஜனதாவில் மூத்த தலைவராக உள்ள ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கொடுக்காவிட்டால் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பா.ஜனதா தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக ஈசுவரப்பாவின் ஆதரவாளர்கள் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கொடுத்தே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈசுவரப்பாவுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் கட்சியில் மீண்டும் அதிருப்தி எழும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தில் பா.ஜனதா எத்தகைய முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Tags :
Next Story