திறந்து 6 மாதங்களுக்குள் சேதம் அடைந்த மேம்பாலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


திறந்து 6 மாதங்களுக்குள் சேதம் அடைந்த மேம்பாலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2018 10:15 PM GMT (Updated: 18 Feb 2018 7:47 PM GMT)

மேம்பாலம் திறந்து 6 மாதங்களுக்குள் சேதம் அடைந்து காணப்படுகிது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஒரகாட்டுபேட்டை, சீமாவரம் வழியாக பாலாறு பாய்கிறது. பாலாற்றை கடந்து செல்ல செங்கல்பட்டு- ஒரகாட்டுபேட்டை இடையே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருந்ததால் பொதுமக்களே திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்கள் திறந்த மேம்பாலத்தை மீண்டும் திறந்து வைத்தனர்.

பாலம் திறக்கப்பட்டு 6 மாதத்திலேயே பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் மேம்பாலத்தை கடந்து செல்லக்கூடியவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் இந்த மேம்பாலம் மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறி வருகின்றது. அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மேம்பாலத்தில் விரைவில் மின் விளக்குகளை அமைத்தும், குண்டும் குழியுமாக உள்ள மேம்பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story