சிங்காரவேலர் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


சிங்காரவேலர் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 18 Feb 2018 10:00 PM GMT (Updated: 18 Feb 2018 8:12 PM GMT)

சிங்காரவேலரின் பிறந்தநாள் விழா புதுவையில் நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

சிங்காரவேலரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை-கடலூர் சாலையில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

வடக்கு மாநில தி.மு.க.வினர் அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையிலும், தெற்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி., நாராயணா, மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர்கள் விசுவநாதன், நாரா.கலைநாதன், துணை செயலாளர்கள் கீதநாதன், அபிசேகம், பொருளாளர் சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திராவிடர் கழகத்தினர் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை அணிவித்தனர்.

மேலும் பல்வேறு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மீனவர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வீராம்பட்டினத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநில மீனவர் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் பலராமன், பொருளாளர் ரத்தினவேல், பொதுச்செயலாளர் மாறன், சட்ட ஆலோசகர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story