கோபி அருகே துணிகரம் பஸ் டிரைவர் வீட்டில் புகுந்து 5 பவுன் தங்க காசு திருட்டு


கோபி அருகே துணிகரம் பஸ் டிரைவர் வீட்டில் புகுந்து 5 பவுன் தங்க காசு திருட்டு
x
தினத்தந்தி 18 Feb 2018 9:30 PM GMT (Updated: 18 Feb 2018 8:34 PM GMT)

கோபி அருகே பஸ் டிரைவர் வீட்டில் புகுந்து 5 பவுன் தங்க காசை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோபி, 

கோபி அருகே உள்ள குள்ளம்பாளௌயத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 49). அரசு பஸ் டிரைவர். அவருடைய மனைவி சுகுனா (45). இவர்கள் தங்கள் வீட்டின் டி.வி. மேல் 5 பவுன் தங்க காசு வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மாடிக்கு சென்றார்கள். சுமார் ½ மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தார்கள்.

அப்போது டி.வி.யின் மீது வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க காசை காணவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

கணவனும், மனைவியும் வீட்டின் மாடிக்கு செல்வதை மர்மநபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். அவர்கள் சென்ற பிறகு உள்ளே நுழைந்து 5 பவுன் தங்க காசையும் திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரோக்கியம் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பவுன் தங்ககாசை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story