மராட்டியத்தின் வளர்ச்சி நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் - மோடி பேச்சு


மராட்டியத்தின் வளர்ச்சி நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் - மோடி பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2018 3:30 AM IST (Updated: 19 Feb 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தின் வளர்ச்சி நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

மும்பை,

மராட்டிய அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மும்பையில் உள்ள பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

செலவு செய்வதற்காக மட்டும் அல்ல பட்ஜெட். வருமானத்திலும் அது கவனம் செலுத்தவேண்டும். பட்ஜெட் தயாரிப்பு மற்றும் தாக்கல் செய்வதில் நாம் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் புதிய பணி கலாசாரத்தையும், சமூக பொருளாதார மாற்றத்தையும் உருவாக்கி உள்ளது. கொள்கை மற்றும் செயல்பாட்டிற்கான வழியில் நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். அரசு பொறுப்புடையதாகவும், ஜனநாயக வழியிலும் செயல்படவேண்டும். பல தடைகள் மற்றும் அதிருப்திகளுக்கு இடையே நாம் உழைத்து கொண்டு இருக்கிறோம்.

கடந்த 3½ ஆண்டுகளில், நாம் பலவீனமான நிலையில் இருந்து 5 டிரில்லியன் ஜி.டி.பி. அளவிற்கு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளோம். நான் உறுதியாக சொல்கிறேன். மராட்டியம் நாட்டில் முதலில் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும். மராட்டியத்தின் வளர்ச்சி நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். கடுமையான உழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை இருந்தால் மட்டும் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் அடைய முடியும். இதேபோல சாதகமான சூழல், கொள்கை, திட்டமிடுதல் மற்றும் செயல்பாடும் இருந்தால் முன்னேற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களை ஈர்க்க இன்று மாநிலங்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.

இதற்கு குஜராத் தான் முன்னோடி ஆகும். முதலீட்டாளர்களை ஈர்க்க மராட்டியம் செய்து வரும் முயற்சிகளை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story