வனப்பகுதியில் மரங்களை வெட்டி ரெயில் பாதை அமைக்க எதிர்ப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்
வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி ரெயில் பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மைசூருவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
மைசூரு,
கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டம் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும், தட்பவெப்ப நிலையும் தான். இந்த குடகு மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் அங்கு அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவார்கள்.
இந்த நிலையில் மைசூருவில் இருந்து கே.ஆர்.நகர், பிரியப்பட்டணா, பஞ்சவள்ளி, நாகரஒலே, குடகு மாவட்டத்தில் உள்ள திதிமதி, கானூரு, நீட்டூரு, பாளலே, குட்டா, வயநாடு வழியாக கேரள மாநிலம் தலச்சேரிக்கு வனப்பகுதி வழியாக புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் குடகில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஒரு வழி பாதையை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றவும் மத்திய அரசு முடிவு எடுத்ததாக தெரிகிறது.
மத்திய அரசின் இந்த முடிவால் வனப்பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ரெயில் பாதையும், தேசிய நெடுஞ்சாலையும் அமைத்தால் இயற்கை வளம் பாதிக்கப்படும், வனவிலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ரெயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.
ஆனாலும் குடகில் இருந்து தலச்சேரிக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில் உள்ள தசரா கண்காட்சி மைதானத்தில் 18-ந் தேதி(அதாவது நேற்று) மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று குடகு மாவட்டத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலரான அய்யண்ணா என்பவர் கூறி இருந்தார்.
அதன்படி நேற்று மைசூருவில் உள்ள தசரா கண்காட்சி மைதானத்தில் மத்திய அரசு குடகு மாவட்டம் வழியாக இரட்டை ரெயில் பாதை அமைக்க முடிவு செய்து உள்ளதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு அய்யண்ணா தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களான பொன்னப்பா, ஜீவன், சோனியா மந்தனா, அர்ஜுன், பெள்ளியப்பா கொடவா சமுதாயத்தை சேர்ந்த தலைவர் நாணய்யா உள்பட குடகு மாவட்ட மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மைசூரு அரண்மனை முன்பு உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சாலைகளில் ஊர்வலமாக வந்தனர். அப்போது குடகு மாவட்டம் வழியாக ரெயில் பாதை அமைத்தால் ஏற்படும் இழப்புகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியப்படி வந்தனர். மேலும் அரண்மனை முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
போராட்டத்தின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலரான அய்யண்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் பாதை திட்டத்திற்காக குடகு மாவட்டத்தில் 12 கிலோ மீட்டர் தூரமும், கேரள மாநிலத்தில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சுரங்க பாதை தோண்டப்பட வேண்டி உள்ளது. இதற்காக ரூ.6,685 கோடி தேவைப்படுகிறது. சுரங்கபாதை தோண்டினால் 2 மாநிலங்களில் உள்ள இயற்கை வளம் வெகுவாக பாதிக்கும். இதனால் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story