5 ஆண்டு வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சித்தராமையா சவால்
5 ஆண்டு வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று எதிர்க்கட்சிகளுக்கு சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஸ்கி நகரில் ரூ.540 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி மக்களுக்கு 165 வாக்குறுதிகளை அளித்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உள்ளது. ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை அருகில் உட்கார வைத்துக்கொண்டு மோடி எங்கள் ஆட்சி மீது ஊழல் புகாரை கூறினால் மக்கள் நம்புவார்களா?.
எடியூரப்பா உள்பட அவருடைய மந்திரிசபையில் இருந்த பலர் சிறைக்கு சென்று வந்தது பொய்யா?. இத்தகையவர்களுக்கு மீண்டும் கர்நாடக ஆட்சியை வழங்கினால் நமது மாநிலம் வளர்ச்சி அடையுமா?. நாங்கள் செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களின் பலனை சாமானிய மக்கள் அடைந்து வருகிறார்கள்.
தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக நாங்கள் அதிகளவில் நிதி ஒதுக்கி திட்டங்களை அமல்படுத்தி உள்ளோம். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டதா?. இது மக்களாகிய உங்களுக்கு தெரியும். இந்த மாநிலத்திற்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்துகிறது. இதன் மூலம் 1.43 கோடி குடும்பங்கள் பயன் பெறும். ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் நடத்தி இருக்கிறோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் முழுமையான பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்துள்ளேன். ஆட்சி அதிகாரம் என்பது அனுபவிப்பதற்கு அல்ல, மக்களுக்கு சேவையாற்ற ஒரு சாதனம் என்று கருதி நாங்கள் ஆட்சியை நடத்துகிறோம். நாங்கள் கடந்த 5 ஆண்டுகள் செய்த வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளோம். இதற்கு எதிர்க்கட்சிகள் தயாரா?. அவர்கள் தயாராக இல்லை. எங்கள் ஆட்சியை பற்றி பொய் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story