காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டு முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
வேலூர்,
கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் தர மறுத்து வந்தநிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு, காவிரிநீர் யாருக்கும் சொந்தமில்லை எனக் கூறியிருப்பதை வரவேற்கிறோம். அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது.
ஆனால், கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் எனக் கூறியிருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மத்திய அரசு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
உண்ணாவிரத போராட்டம்
இல்லையெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சுப்ரீம் கோர்ட்டு முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
காவிரி பிரச்சினை குறித்துப் பேச எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், முதலில் தமிழக முதல்-அமைச்சர் தான் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story