மாவட்ட செய்திகள்

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மனு கொடுத்த 10 நிமிடத்தில் உதவித்தொகைக்கான ஆணை + "||" + 5 For Disabilities In 10 minutes of petition Order for scholarship

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மனு கொடுத்த 10 நிமிடத்தில் உதவித்தொகைக்கான ஆணை

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மனு கொடுத்த 10 நிமிடத்தில் உதவித்தொகைக்கான ஆணை
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்த 10 நிமிடத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறை துணை கலெக்டர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ரோகிணி, தகுதியுடைய மனுக்களின் மீது காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்திற்கு நேரடியாக வந்து கலெக்டர் ரோகிணி பெற்றுக்கொண்டார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் வாழப்பாடி அருகே உள்ள திருமானூரை சேர்ந்த ஆரோக்கியசெல்வன் (வயது 34), சேலம் மணியனூரை சேர்ந்த அப்துல்கபார் (37), மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த ரவிவர்மா (21), சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்த இக்பால் பாஷா (28), சங்ககிரி அருகே உள்ள அரசிராமணியை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி ஆகிய 5 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு செய்தார். அவர்களின் கடுமையான ஊனத்தை கவனத்தில் கொண்டு, கோரிக்கை மனுக்களை பெற்ற 10 நிமிடங்களில் 5 பேருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணிக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் ரோகிணி கூறுகையில், “இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 389 மனுக்களை துறை அலுவலர்களுக்கு வழங்கி தகுதியான கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய குறைதீர்கும் நாள் கூட்டத்தில் கடும் ஊன முற்ற மாற்றுதிறனாளிகள் 5 பேருக்கு மனு அளித்த 10 நிமிடங்களில் மாதம் ரூ.1,500 உதவித்தொகைகான ஆணை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.