தமிழக மருத்துவ துறையில் பார்மசிஸ்ட் பணியிடங்கள்


தமிழக மருத்துவ துறையில் பார்மசிஸ்ட் பணியிடங்கள்
x
தினத்தந்தி 20 Feb 2018 7:17 AM GMT (Updated: 20 Feb 2018 9:26 AM GMT)

தமிழக அரசு மருத்துவ சேவைப் பணிகள் துறைக்கு பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மிழக அரசு மருத்துவ சேவைப் பணிகள் துறைக்கு ஆட்களை தேர்வு செய்ய எம்.ஆர்.பி. எனும் மருத்துவ தேர்வு வாரியம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. சித்தா பிரிவில் 148 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல ஆயுர்வேதா பிரிவில் 38 பேரும், ஓமியோபதி பிரிவில் 23 பேரும், யுனானி பிரிவில் 20 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 229 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர் களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் அந்தந்த மருத்துவப் பிரிவுகளில் பார்மசி டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். 

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-3-2018–ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்  www.mrb.tn.gov.in  என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

Next Story