மோடியின் தேர்வு போதனைகள்


மோடியின் தேர்வு போதனைகள்
x
தினத்தந்தி 20 Feb 2018 1:43 PM IST (Updated: 20 Feb 2018 1:43 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி சமீபத்தில், மாணவர்கள், தேர்வை துணிவுடன் எதிர்கொள்வதற்காக ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

மாணவர் நலனில் அதிக அக்கறை காட்டும் பிரதமர் மோடி  , சமீபத்தில் டெல்லியின் தல்கடோரா மைதானத்தில் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்தார். அதில் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய அவர், மாணவர்களை நேரடியாக கருத்து தெரிவிக்க வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொலைதூரத்தில் உள்ள மாணவர்களிடமும் கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர். இதையடுத்து அவர்களின் கேள்விக்கு, பதிலளித்து, ‘பரீக்ஷா பி சார்ச்சா’ என்ற பெயரில் பதிவாக வெளியிடுவதாக கூறி உள்ளார். தன்னை மாணவர்கள் நண்பனாக பார்க்கும் படி கூறிய அவர், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கேள்விக்கு பதில்களை தயார் செய்து வருகிறார்.

Next Story