சேரன்மாதேவியில் 2 கோவில்களில் நகை, பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சேரன்மாதேவியில் 2 கோவில்களில் நகை, பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Feb 2018 8:45 PM GMT (Updated: 20 Feb 2018 3:10 PM GMT)

சேரன்மாதேவியில் ஒரே நாளில் 2 கோவில்களில் நகை, பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேரன்மாதேவி,

சேரன்மாதேவியில் ஒரே நாளில் 2 கோவில்களில் நகை, பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

முப்பிடாதி அம்மன் கோவில்


நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தெற்கு நான்காவது தெருவில் முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து பூசாரி கோவிலிலை பூட்டிவிட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் கோவிலில் உண்டியல் இல்லாததால் அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலி மற்றும் அங்குள்ள பித்தளை பொருட்களை திருடிச் சென்று விட்டனர். நேற்று காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் பூட்டை உடைக்கப்பட்டும், தாலிப்பொட்டு திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்த கோவிலுக்கு அருகே வயல் பகுதியில் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள் அங்கு உண்டியல் இல்லாததால் கோவிலில் இருந்த பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை


இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். ஒரே நாளில் 2 கோவில்களில் நகை, பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story