ஊரக அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2018 3:00 AM IST (Updated: 21 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு ஊரக அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 4-ம் பிரிவு மற்றும் ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரன், பொருளாளர் விஜயகோபி, கோட்டத்தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், கோட்ட பொருளாளர் முனியப்பன், நிர்வாகிகள் ஜெய்பீம்குமார், மகாதேவன், அன்பரசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட ஊரக அஞ்சல் ஊழியர்களில் 144 பேருக்கு கடந்த ஒரு ஆண்டாக சம்பள குறைப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சம்பளகுறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் வழங்க வேண்டும். கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு சேமிப்பு கணக்குதாரர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கும் போக்கை கைவிட வேண்டும். ஊழியர் விரோத போக்கை கைவிட்டு ஊரக அஞ்சல் ஊழியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் ஊரக அஞ்சல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திரளாக கலந்து கொண்டனர்.
1 More update

Next Story