ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்


ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்
x
தினத்தந்தி 20 Feb 2018 9:30 PM GMT (Updated: 20 Feb 2018 7:49 PM GMT)

ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று தினகரன் அணி மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பனைக்குளம்,

மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை வருகிற 24-ந்தேதி மாவட்டம் முழுவதும் நடத்திட தினகரன் அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆலோசனையின்படி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாரதிநகரில் உள்ள் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி, பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, மாவட்ட அவை தலைவர் வக்கீல் அரிதாஸ், மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார், மாநில மீனவரணி இணை செயலாளர் கணேஷ்குமார், மாவட்ட பொருளாளர் மோகன்தாஸ், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன், போகலுர் ராஜாராம் பாண்டியன், கடலாடி பத்மநாபன், திருவாடானை ரத்தினகுமார், திருப்புல்லாணி முத்துச்செல்வம், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் பேசியதாவது:- தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு நம்மையெல்லாம் வழிநடத்தி சென்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நமக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

குறிப்பாக ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் முனைப்போடு செயல்பட்டு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகமான இளைஞர்கள், பட்டதாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். இதை பார்க்கும் போது பொதுமக்கள், தொண்டர்கள் நமது பக்கம் உள்ளனர் என்பதை உணர முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் லெனின், குயவன்குடி செயலாளர் சிவா, முரளி, செல்வக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண்கார்த்திக், நாசர்கான், பைராம்கான், நீராஷா, ரகுமான்கான், சாகுல்அமீது, ரஞ்சித்குமார், களஞ்சியராஜா, மண்டபம் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story