தங்கும் விடுதி ஊழியர்களை வனத்துறையினர் தாக்கிய விவகாரம்: கொடைக்கானலில் முழு அடைப்பு
கொடைக்கானலில் தங்கும் விடுதி ஊழியர்களை தாக்கிய வனத்துறையினரை கண்டித்து முழு அடைப்பு நடந்தது.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள் 12 பேர், மன்னவனூர் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வருவாய்த்துறைக்கு சொந்தமான பகுதியில் அவர்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த வனத்துறையினர் அவர்களை சத்தம் போட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள், வனத்துறையினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தங்கும் விடுதி ஊழியர்கள் 12 பேர் தாக்கப்பட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 6 பேர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும், மற்ற 6 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட வனத்துறையினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தங்கும் விடுதி ஊழியர்களை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும். பாதிக்கப்பட்ட விடுதி ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விடுதி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது. வன உயிரின சரணாலயம் அமைக்கக்கூடாது. சுற்றுலா பகுதிகளில் சிறு கடைகள் வைத்துள்ள வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும், வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பாக கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முழு போராட்டம் நடந்தது. இதையொட்டி கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டன.
சிறு கடைகள் முதல் ஓட்டல்கள் வரை அனைத்து மூடப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
முன்னதாக வனத்துறையினரை கண்டித்து கே.ஆர்.ஆர்.கலையரங்கத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணி ஏரிச்சாலை, நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு, அண்ணாசாலை வழியாக மூஞ்சிக்கல்லை வந்தடைந்தது. இதில் நகரில் உள்ள பல்வேறு அமைப்பினர், கட்சியினர் உள்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது வனத்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் தாக்குதல் நடத்திய வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story