விஜயமங்கலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்


விஜயமங்கலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Feb 2018 3:31 AM IST (Updated: 21 Feb 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

விஜயமங்கலம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், சேர்வகாரன்பாளையம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல்

பெருந்துறை,

விஜயமங்கலம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், சேர்வகாரன்பாளையம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் ரோட்டை உடனடியாக அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இந்தநிலையில் உடனே சர்வீஸ் ரோட்டை போட்டு தரவேண்டும் என்று நேற்று காலை 10 மணியளவில் விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே சாலைமறியலில் ஈடுபட்டார்கள். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்களிடம், ‘சர்வீஸ் ரோட்டை விரைந்து அமைக்க உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று உறுதி அளித்தார்கள்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த சாலை மறியலால் விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story