இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 109 பேர் காரைக்கால் வந்தனர்
இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 109 பேர் நேற்று இரவு காரைக்கால் வந்தனர். இதன்பின் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காரைக்கால்,
புதுவை மாநிலம் காரைக்கால் மேடு மீனவர்கள் தங்கமணி, மதன், விஷ்ணுசுந்தரம், ஆறுமுகம் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களையும் சேர்த்து நாகையை சேர்ந்த 30 பேர், ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 46 பேர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 18 பேர், கோட்டபாக்கத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 109 மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கடந்த ஆண்டில் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. அதன்படி இந்த அரசுகளும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டன. இதைத்தொடர்ந்து 109 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் இந்திய தூதரக கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று மாலை மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படை கப்பல்கள் மூலம் அழைத்துவரப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 கப்பல்களில் மாலை 6.15 மணிக்கு காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு 109 மீனவர்களும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் அவர்கள் உடனடியாக கப்பல்களில் இருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை.
நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் இரவு 8.15 மணிக்கு துறைமுகத்துக்கு வந்தார். இதையடுத்து கப்பல்களில் இருந்து மீனவர்கள் இறக்கப்பட்டு கலெக்டர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 10 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் அங்கு வந்து இருந்தனர். அவர்கள் மீனவர்களை பார்த்து ஆனந்தகண்ணீர் வடித்தபடி தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

Related Tags :
Next Story