போக்குவரத்து சிக்னல் கம்பங்களை அகற்ற வேண்டும்


போக்குவரத்து சிக்னல் கம்பங்களை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 21 Feb 2018 12:00 AM GMT (Updated: 21 Feb 2018 12:00 AM GMT)

திருவாரூரில் பழு தடைந்து செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுத்திடவும், போக்குவரத்தை சீரமைத்திடவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சிக்னல் விளக்குகள் எரிவதை கண்காணித்து போலீசார் போக்குவரத்தினை சீரமைத்து வந்தனர். ஆனால் கால போக்கில் இந்த சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பு இன்றி செயல் படாமல் போனது. தற்போது திருவாரூர் நகரில் அமைக்கப்பட்டிருந்த பல சிக்னல் கம்பங்கள் காணாமல் போனது.

இந்த நிலையில் திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பம் பழுதடைந்து சாலையில் சாய்ந்து. திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள சிக்னல் கம்பம் செயல்படாமல் உள்ளது. திருவாரூர் நகர் முழுவதும் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போக்கு வரத்து சிக்னல் கம்பங்கள் பராமரிப்பு இன்றி செயல் படாமல் உள்ளன. எனவே ரெயில்வே மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் விபத்துக்கள் ஏற்படும் முன்பாக பழுதடைந்த சிக்னல் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story