தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: 65 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது


தூத்துக்குடியில்  மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: 65 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 21 Feb 2018 8:45 PM GMT (Updated: 21 Feb 2018 1:33 PM GMT)

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 65 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை மறுநாள்(சனிக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 65 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை மறுநாள்(சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஸ்டாலின் பிறந்தநாள்


தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், இளைஞர் எழுச்சிநாளாக கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலைய சாலை அருகிலும், உப்பாற்று ஓடை ரவுண்டானா, இந்திய உணவுக்கழக குடோன் எதிரே, புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகிலும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வயதை குறிக்கும் வகையில் 65 அடி உயர பிரமாண்டமான கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கொடிக்கம்பங்களில் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கட்சி கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள்

விழாவுக்கு நான்(ஜோயல்) தலைமை தாங்குகிறேன். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளராக மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில் மாவட்ட, மாநில,ஒன்றிய, நகர, பேரூர்கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தெரிவித்து உள்ளார்.

Next Story