தூத்துக்குடி அணிவகுப்பில் போலீசாருடன் மோதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் நடந்த அணிவகுப்பில் போலீசாருடன் நடந்த மோதல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,

அணிவகுப்பில் மோதல்
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாடு நிறைவு நாளை நேற்று முன்தினம் கட்சியினரின் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு அண்ணாநகர் 7–வது தெரு விலக்கில் சென்றபோது போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
உடனே போலீசார் அந்த பகுதியில் கிடந்த கட்டைகளை எடுத்து அந்த கட்சி தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது தொண்டர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் தொண்டர்கள் 4 பேரும், போலீசார் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
7 பிரிவுகளில் வழக்கு
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஏட்டு சேகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் விமல் (23), திண்டுக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஷ்ணுவர்த்தன் (30) மற்றும் தொண்டர்கள் சிலர் மீது சட்டவிரோதமாக கூடி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, தென்பாகம் போலீசார் 147, 148, 323, 324, 353, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று மத்தியபாகம் போலீஸ்காரர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் விமல், விஷ்ணுவர்த்தன் மற்றும் சிலர் மீது மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் மீது புகார்
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அர்ச்சுனன், மாநிலக்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடியில் எங்கள் கட்சியின் 22–வது மாநில மாநாடு நிறைவு நாள் அன்று செந்தொண்டர் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட்டது. அணிவகுப்பின் போது, தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், வாகனங்கள் செல்ல அனுமதித்து பிரச்சினையை உருவாக்கி உள்ளார். அவரும், அவருடன் வந்த போலீசாரும் அந்த பகுதியில் கிடந்த பலகைகளை எடுத்து, அணிவகுப்பில் சென்ற தொண்டர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் 5 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். உள்நோக்கத்துடனும், திட்டமிட்டும் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. தூத்துக்குடியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்தின் அணுகுமுறை பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அணிவகுப்பில் நடந்த தாக்குதலுக்கும் அவரே காரணமாக இருந்து உள்ளார். ஆகையால் உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவருடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story