தொழுநோயாளிகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது


தொழுநோயாளிகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 21 Feb 2018 10:30 PM GMT (Updated: 21 Feb 2018 5:55 PM GMT)

செங்கல்பட்டு அடுத்த திருமணியில் இயங்கும் மத்திய அரசின் தொழுநோயாளிகள் மருத்துவமனை மற்றும் காப்பகத்தில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு அடுத்த திருமணியில் இயங்கும் மத்திய அரசின் தொழுநோயாளிகள் மருத்துவமனை மற்றும் காப்பகத்தில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஓவியர் வெர்னர்டோர்னிக் என்பவர் திருமணி பகுதியில் ஓவிய பள்ளி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் வரைந்த ஓவியங்களை மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் விற்க, ஓவிய கண்காட்சி தொடங்கினார்.

இந்த ஓவிய கண்காட்சியை கலைச்செம்மல் விருது பெற்ற சிற்பக்கலைஞர் த.பாஸ்கரன், தனியார் புத்தக மைய இயக்குனர் அப்பல்லோ குமரேசன், சமூக ஆர்வலர் பத்மாவெங்கடேசன் முன்னிலையில், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தொடங்கி வைத்தார்.

வருகிற 25-ந் தேதி வரை நடைபெறும் ஓவிய கண்காட்சியில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலான ஓவியங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த ஓவிய விற்பனையில் வரும் வருவாய் தொழுநோயாளிகளின் நலனிற்கு செலவிடப்பட உள்ளதாக ஓவியர் வெர்னர்டோர்னிக் தெரிவித்துள்ளார்.

Next Story