நந்திவரம் கிராமத்தில் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

நந்திவரம் கிராமத்தில் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் அடங்கிய நந்திவரம் கிராமத்தில் சுமார் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்திர நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி நந்தி தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு மழை காலங்களில் தண்ணீர் வரும் வழிகள் முழுவதும் அடைக்கப்பட்டு விட்டதால் கோடைக்காலங்களில் தண்ணீரின்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குளத்தில் ஒருபுறம் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மற்றொரு புறத்தில் குப்பைகள் சேர்ந்துள்ளதால் குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பொதுமக்களும், பக்தர்களும் கூறுகையில்:-
ஸ்ரீ நந்தீஸ்வரர் நந்தி தீர்த்தக்குளத்தில் குளித்தால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். ஆனால் குளம் முறையாக பராமரிக்கப்படாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் குளம் மாசடைந்து காணப்படுகிறது இந்த குளத்தின் படிக்கட்டுகள் சேதம் அடைந்து குளத்தை சுற்றி முள்செடிகளும், குளத்தில் கொடிகளும் படர்ந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களால் இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. குளத்துக்கு தண்ணீர் வரும் வழிகளை சீரமைக்க வேண்டும். இது பற்றி பலமுறை புகார் கொடுத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
மேலும் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story