பால் கலப்பட இலவச பரிசோதனை முகாம்
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பால் கலப்பட இலவச பரிசோதனை முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நல்லம்பள்ளி,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா ஆகியோர் முகாமில் பங்கேற்று பாலின் தர பரிசோதனையை ஆய்வு செய்தனர். பாலில் சோடா உப்பு, ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதி பொருட்களின் கலப்படம் உள்ளதா? என்று பால் தரபரிசோதனை செய்யும் நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் என பலர் கலந்து கொண்டு பாலின் தரத்தை பரிசோதனை செய்து கொண்டனர்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பால் கலப்பட இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி ஆகியோர் நவீன கருவி மூலம் பாலில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவித்தனர். மேலும் தரமான பால் எவ்வாறு இருக்கும், தரமற்ற பால் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story