தஞ்சையில் ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை கண்டித்து தஞ்சையில் ஆபரேட்டர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை கண்டித்து அடையாள உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமோகன் வரவேற்றார்.
போராட்டத்தில் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் தாமோதரன், மாநில பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இதில் தனியார் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையின் சிக்னலை கொடுக்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் தொழில் செய்யும் பகுதியில் புதிதாக ஆபரேட்டர்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நியமிப்பதை அனுமதிக்க மாட்டோம். நிபந்தனைகள் இன்றி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எந்த கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் சிக்னலையும் எடுத்து சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.
பழைய பதிவின் அடிப்படையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் கட்டாயம் செட்டாப்பாக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேபிள் டி.வி.ஆபரேட்டர்களை நிர்ப்பந்திக்க கூடாது. முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென கேபிள் டி.வி. சிக்னலை வாரக்கணக்கில் துண்டிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாநில துணைத்தலைவர்கள் வெள்ளைச்சாமி, ஆனந்தன், துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன், மாவட்ட தலைவர்கள் வரதராஜன், ரமேஷ்குமார், செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கண்ணன், முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செழியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story