தமிழின் இனிமையை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும்
தமிழின் இனிமையை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்று தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த உலக தாய்மொழி நாள் விழாவில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உலகத்தாய்மொழி நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பதிவாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
உலகத்தாய்மொழி தினத்தை தமிழ்ப்பல்கலைக்கழகம் கொண்டாடுவது உண்மையாகவே மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் உலகத்தமிழர்களுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்குகின்ற தமிழ்மொழிக்கென்று செயல்படும் பல்கலைக்கழகம் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகும். உலக தாய்மொழி தினத்தை உலக தமிழ்மொழி தினமாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்மொழி தான் உலக மொழிகளில் பழமையானது.
தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பணி மிகவும் முக்கியமானது. 1921-ம் ஆண்டு தமிழுக்கென்று தனியாக பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று அவர்கள் தான் தீர்மானம் நிறைவேற்றினர்.
கரந்தை தர்மாம்பாள் ஈ.வே.ராவுக்கு பெரியார் பட்டத்தை வழங்கிய நிகழ்ச்சி கரந்தைக்கு பெருமை சேர்ப் பதாகும்.
குமரகுருபரர், நன்னூலார், பூரணலிங்கம்பிள்ளை, கரந்தை தமிழ்ச்சங்க நிறுவனர் மகேஸ்வரனார், நா.மு.வேங்கட சாமி நாட்டார், பாரதி போன்றோரின் தமிழ்ப்பணி முக்கியமானதாகும். மாணவர்கள் பழமையான இலக்கியங்களை ஆர்வத்தோடு பயில வேண்டும். அந்த இலக்கியங்களை படித்து ஆய்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழில் சிறந்த ஆய்வாளராக திகழ்ந்த மயிலை சீனிவேங்கடசாமி, தெ.பொ.மீ., சிவத்தம்பி, கைலாசபதி போன்ற தமிழறிஞர்களைப்போல் புகழ்பெற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழை அதன் இனிமையை உணர்ந்து படிக்க வேண்டும்.
விழாவில் திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முகசெல்வகணபதி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நாட்டுப்புறவியல்துறை பேராசிரியர் இளையாபிள்ளை வரவேற்றார்.

Related Tags :
Next Story