காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
பட்டதாரி வாலிபரை தாக்கிய வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
பெங்களூரு,
பெங்களூரு டாலர்ஸ்காலனியை சேர்ந்த தொழில்அதிபர் லோகநாத்தின் மகன் வித்வத், கடந்த 17-ந் தேதி இரவு கப்பன்பார்க் அருகே உள்ள வணிகவளாகத்தில் இருக்கும் ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஹாரீசின் மகனான முகமது ஹாரீஸ் நலபட்டின் காலில் வித்வத் கால்பட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த முகமது ஹாரீஸ் நலபட், அவரது நண்பர்கள் வித்வத்தை கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக இருந்த முகமது ஹாரீஸ் நலபட்டை உடனடியாக கைது செய்யாததால், கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கடகலி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அந்த வழக்கு இன்னும் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்படாமல் உள்ளது. மேலும் முகமது ஹாரீஸ் நலபட் உள்ளிட்டவர்கள் மீது கப்பன்பார்க் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 19-ந் தேதி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் முகமது ஹாரீஸ் நலபட் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவரது நண்பர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரையும் கடந்த 19-ந் தேதி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவர்களது போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனால் முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரையும் நேற்று மதியம் 3 மணியளவில் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றார்கள். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் 7 பேரும் பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அதே நேரத்தில் முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஜாமீன் மனுவும் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தாக்குதலுக்கு உள்ளான வித்வத் சார்பில் ஆஜரான வக்கீல் ஷியாம் சுந்தர், வித்வத்தை கொடூரமாக தாக்கியதால் பலத்த காயம் அடைந்து உள்ளார். இந்த வழக்கில் முகமது ஹாரீஸ் நலபட் உள்ளிட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே முகமது ஹாரீஸ் நலபட்டுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார். அதே நேரத்தில் முகமது ஹாரீஸ் நலபட் உள்ளிட்ட 7 பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முன்வரவில்லை. இதையடுத்து, முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் முகமது ஹாரீஸ் நலபட் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்கள். பின்னர் 7 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் கப்பன்பார்க் போலீசாரின் காவலில் இருந்த முகமது ஹாரீஸ் நலபட்டை, அவரது தந்தையான ஹாரீஸ் எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தினர் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Tags :
Next Story