தலையை ஆதிக்கம் செய்யும் நவக்கிரகங்கள்
நமது உடலில் ஏற்படும் அனைத்து வகையான உணர்ச்சிகளுக்கும் தலையே முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜோதிடத்தில் மருத்துவம்
மனிதன் பிறக்கும் போதே, அவனுக்கான தலைவிதி எழுதப்படுவதாக மக்களின் நம்பிக்கை. அந்த தலையெழுத்தைத் தான் ஜோதிடத் துறை கணித்துக் கூறுகிறது. ‘எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். ஆறு அடி உயரம் கொண்ட மனிதனில், ஒரு அடி கொண்ட தலை தான் முக்கியத்துவம் பெறுகிறது. நமது உடலில் ஏற்படும் அனைத்து வகையான உணர்ச்சிகளுக்கும் தலையே முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய அனைத்து செயல்களுக்கும் மூளையே உத்தரவு பிறப்பிக் கிறது. மூளையின் உத்தரவின்றி எந்த விதமான அசைவுகளும், உணர்வுகளும் நம்மிடம் இருக்காது. ஒரு மனிதனின் அடையாளம் என்ன என்பது, தலையை வைத்து தான் கூறப்படுகிறது.
நாம் ஒரு கடின முயற்சியில் வெற்றி பெறு கிறோம். அதற்குரிய வெற்றி கிரீடம் நம் தலையில் தான் வைக்கப்படுகிறது. நம் தலை அப்படி என்ன செய்து விட்டது?. அந்த வெற்றிக்குரிய அறிவும், ஆற்றலும், விடாத முயற்சியும், ஓயாத உழைப்பும் மூளையின் செயல்பாட்டால் வந்தது. நமது மூளைக்கு மகுடம் சூட்ட முடியாமல், அந்த மூளை பகுதி இருக்கும் தலைக்கு மகுடம் சூட்டி விடுகிறோம். ஆழ்ந்த சிந்தனை, தெளிவான அறிவு, அதி புத்திசாலித்தனம் இவையாவற்றுக்கும் காரணம் நம் மூளை தான்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட தலைப்பகுதியை நவக்கிரகங்கள் எவ்வாறு ஆதிக்கம் செய்கின்றன என்பதைப் பார்ப்போம்.
சூரியன்: உச்சி தலை, மண்டை ஓடு, கண் ஒளி, மேல் தாடை, கருவிழி ஒட்டிய தசை, பார்வை சக்தி.
சந்திரன்: கவர்ச்சியான காந்த ஈர்ப்பு கொண்ட முக அமைப்பு, முக வடிவம், கன்னம், தலையில் உறையும் நீர், எச்சில், சுரப்பிகள், நெற்றி.
செவ்வாய்: மூளையை சுற்றி ஓடும் ரத்த ஓட்டம், ரத்த நாளம், செவிப்பறை, மேல் உதடு.
புதன்: சிறு மூளை, இரண்டு காது, தலை உச்சியில் தொடங்கும் நரம்பு மண்டலம், கண்களுக்குள் இருக்கும் நரம்பு.
குரு: பெரிய மூளை, மூளையின் சக்தி, பற்கள், தலை தசைகள், கண் கருவிழி.
சுக்ரன்: மூக்கு, அழகான மூக்கு வடிவம், கண்கள் கீழ் தாடை, கீழ் உதடு, கண் லென்ஸ், பார்வையின் தூரம்.
சனி: பின் தலை, தலைமுடி, புருவம், நாக்கு, நாக்கின் கீழ் உள்ள தசைகள், சிறு நாக்கு.
ராகு: மூக்கு துவாரம், நாசி, மூச்சுக் குழாய்.
கேது: பற்களைத் தாங்கும் ஈறுகள், கீழ் தாடை தசைகள்.
நவக்கிரகங்களும் நம்முடைய தலையில் இருக்கும் உறுப்புகளை ஆதிக்கம் செய்கிறது என்பதைப் பார்த்தோம். நமது ஜாதகத்தில் ஏதாவது கிரக பாதிப்புகள் இருந்தால், அதற்குரிய அவயங்களில் பாதிப்புகள் உண்டாகும். ஒருவரது ஜாதகத்தில் குருவும், புதனும் இணைந்து இருந்தால், அந்த நபர் மிகப்பெரிய அறிவாளியாக இருப்பார். இதுவே குரு, புதன் வலிமை குருவாக காணப்பட்டால், அந்த நபரின் அறிவுக்கூர்மை சொல்லும் படியாக இருக்காது. நமது மூளைக்கு அதிபதியாக குருவும், நரம்புக்கு அதி பதியாக புதனும் இருப்பதாலேயே இந்த அறிவுத் திறன் வெளிப்படுகிறது.
காதலுக்குரிய கிரகம் செவ்வாய், சுக்ரன் ஆகும். காதலின் அடையாளமாக வெளிப்படுவதில் முத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த முத்தம் கொடுக்க மேல் உதட்டில் ஆதிக்கம் செய்யும் செவ்வாய், கீழ் உதட்டில் ஆதிக் கம் செய்யும் சுக்ரன் இரண்டின் இணைப்பே ஆசையின் தூண்டுதலாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் கிரகங்களின் காரணமாகத் தான் நமது செயல்பாடுகள் உள்ளது என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
Related Tags :
Next Story