போலீசார் குடும்பத்தினருக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் நடந்தது
தூத்துக்குடியில் போலீசார் குடும்பத்தினருக்கு தனியார் வேலை வாய்ப்பு வழங்கும் முகாம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீசார் குடும்பத்தினருக்கு தனியார் வேலை வாய்ப்பு வழங்கும் முகாம் நடந்தது.
வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்த போது இறந்த போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் போலீசாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தூத்துக்குடியிலுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்த இந்த வேலை வாய்ப்பு முகாமை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி முன்னிலை வகித்தார்.
35 நிறுவனங்கள்
இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள, பணியில் இருந்த போது இறந்த போலீசார் மற்றும் தற்போது பணியில் இருக்கும் போலீசார்களின் குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இதில், மாவட்டத்தில் உள்ள 6 கல்வி நிறுவனங்கள் உள்பட 35 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்தனர்.

Related Tags :
Next Story