மருத்துவமனை கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களுக்கு தலா 3 வருடம் சிறை தண்டனை
திருச்சியில் தனியார் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களுக்கு தலா 3 வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
திருச்சி,
திருச்சியை அடுத்த பெட்டவாய்த்தலை பெரியார் நகரை சேர்ந்தவர்கள் தமிழ்செல்வன்(வயது30), துரைமுருகன்(37). இவர்களுடைய உறவினர் ஒருவர் தில்லைநகர் 3–வது கிராசில் உள்ள ராயல் பேர்ல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறி அந்த மருத்துவமனையின் கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். கடந்த 12–10–2012 அன்று இந்த சம்பவம் நடந்தது.
3 வருடம் சிறை தண்டனை
இது குறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்து திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.குமரகுரு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், தமிழ்செல்வனுக்கும், துரைமுருகனுக்கும் தலா 3 வருடம் சிறை தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்தும், அபராத தொகை கட்டவில்லை என்றால் மேலும் 12 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story