2-வது நாளாக ‘ஏர்செல்’ சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை
சேலத்தில் 2-வது நாளாக ‘ஏர்செல்’ சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை ஊழியர்களிடம் வாக்குவாதம்
சேலம்,
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ‘ஏர்செல்’ செல்போன் நிறுவனத்தின் சேவை பாதிப்பு காரணமாக அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ‘ஏர்செல்’ சேவை மையங்களை, வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு தங்களது செல்போன் எண்களை மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொடுக்குமாறு விண்ணப்பித்து வருகின்றனர். சேலம் 4 ரோடு அருகே உள்ள ‘ஏர்செல்’ செல்போன் நிறுவனத்தின் சேவை மையத்தை நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். பின்னர், இதுபற்றி அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல ஏற்பாடு செய்தனர். இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக சேலம் 4 ரோடு அருகே உள்ள ‘ஏர்செல்’ செல்போன் சேவை மையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, அவர்கள் சேவை மையத்தில் இருந்த ஊழியர்களை சந்தித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எவ்வித அறிவிப்பு கொடுக்காமல் ‘ஏர்செல்’ நெட்ஒர்க்கை ஏன் திடீரென துண்டித்தீர்கள்? என கேட்டு வாடிக்கையாளர்கள் ஆவேசமாக பேசினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ‘ஏர்செல்’ சேவை மைய ஊழியர்கள் தரப்பில், வாடிக்கையாளர்கள் அனைவரும் அமைதியாக இருங்கள்? நீங்கள் விரும்பிய மற்ற செல்போன் நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும், இதற்காக ‘ஏர்செல்’ நிறுவனத்திற்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சேவை மையத்துக்கு வந்த ‘ஏர்செல்’ வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களை மாற்றாமல் இணைப்பை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டு சென்றதை காணமுடிந்தது.

Related Tags :
Next Story