மொபட் திருட்டில் ஈடுபட்டவர் கைது 21 மொபட்டுகள் பறிமுதல்


மொபட் திருட்டில் ஈடுபட்டவர் கைது 21 மொபட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பகுதியில் மொபட் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மொபட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மோட்டார்சைக்கிள் திருட்டு தொடர்பாக புகார்கள் அதிக அளவில் வந்தன. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், ஏட்டு அர்ச்சுணன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் மோட்டார்சைக்கிள் திருட்டை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணாசிலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் வந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா கத்திரிமேடு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது42) என்பதும், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், திட்டச்சேரி, பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட்டுகளை தொடர்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story