வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்
வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் 3 மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட டவுன் போலீஸ் நிலையம் சார்பில் கனரக, இலகுரக மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.
இதில் போலீசார் மற்றும் கனரக, இலகுரக மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் கே.எம்.சரயு, வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் பேசியதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டபடி அனைத்து வாகன ஓட்டுனர்களும், வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகன சோதனையின் போது அசல் ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் 3 மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பேசுதல், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல், அதிக அளவில் சுமை ஏற்றுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல் ஆகியவை வாகன விதிமுறைகளை மீறிய செயல்களாகும். அப்படி சென்றால் வாகன ஓட்டிகளின் அசல் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story