தரமான உணவு வழங்கக்கோரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்
தரமான உணவு வழங்கக்கோரி பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பிற்படுத்தபட்டோர் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை எனவும், காலையில் வழங்கும் உணவையே மதியத்திற்கும் வழங்கப்படுவதாக கூறி, நேற்று சமைத்த உணவுடன் விடுதியின் முன்பு தரையில் அமர்ந்து மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமயம் தாசில்தார் ரமேஷ் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை, காலையில் சமைத்த உணவை மதியமும் வழங்கப்படுகிறது. இரவில் எங்கள் பாதுகாப்பிற்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடன் தூங்க வேண்டி உள்ளது. மேலும் விடுதியை எங்களேயே சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதுதொடர்பாக விடுதி வார்டன் வந்தால்தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து தாசில்தார் ரமேஷ், மாவட்ட பிற் படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதி காரிக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி சுபகாளிஸ்வரன் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விடுதியில் பணியாற்றுபவர்களை இடமாறுதல் செய்வதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மாணவிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

Related Tags :
Next Story