தமிழக-கர்நாடக எல்லையில் நக்சல் தேடுதல் வேட்டை அதிரடிப்படை போலீசார் தீவிரம்
தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அதிரடிப்படை போலீசார் தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்படி, அதிரடிப்படை போலீசார் தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் மேற்பார்வையில், நாசவேலை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜூ, வாசுதேவன், ஏட்டு வேலு மற்றும் போலீசார் தமிழக - கர்நாடக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையொட்டி அவர்கள் பேரிகை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சின்னாரன்தொட்டி, ஏகல்குண்டு, செம்மறியாடு பாறை, எறும்புகோம்பை, குருப்பட்டிபயல் உள்ளிட்ட கிராமப்பகுதியில் நக்சலைட், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்திற்கிடமாக நபர்கள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு அப்பகுதி பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர். இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story