ஈரோடு கீரக்கார வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழா
ஈரோடு கீரக்கார வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
ஈரோடு,
ஈரோடு கீரக்கார வீதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு குண்டம் விழாவையொட்டி கடந்த 13-ந் தேதி இரவு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 14-ந் தேதி அதிகாலை அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 18-ந் தேதி காலை காரை வாய்க்காலில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். 20-ந் தேதி அம்மனுக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குண்டம் இறங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து முதலில் தீ மிதித்தார். அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையாக குண்டம் இறங்கினார்கள். இதில் பக்தர்கள் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனின் வீதி உலா நடந்தது. இதில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Related Tags :
Next Story