கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா புகார்
பெங்களூருவில் ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா புகார் அளித்தது.
பெங்களூரு,
சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அரசுக்கு உத்தரவிடுமாறு பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.ஏ.ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து பட்டதாரி வாலிபர் வித்வத் என்பவரை கொடூரமாக தாக்கினர். இதில் வித்வத் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்து பெட்ரோல் ஊற்றி தீவைப்பதாக மிரட்டினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாக கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை பா.ஜனதா மூத்த தலைவரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.அசோக் தலைமையில் பா.ஜனதா குழுவினர் பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது பெங்களூருவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து அவர்கள் விவரித்து ஒரு மனுவை கொடுத்தனர். இந்த சந்திப்புக்கு பின் ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் குறித்து கவர்னரிடம் கூறி ஒரு மனுவை கொடுத்தோம். வித்வத் தாக்கப்பட்டது குறித்து முழு தகவல்களை கவர்னரிடம் தெரிவித்தோம். உடனடியாக தலைமை செயலாளரை அழைத்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்குமாறும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அரசுக்கு உத்தரவிடுமாறும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தோம்.
சில ஆவணங்களை கவர்னர் கேட்டுள்ளார். அந்த ஆவணங்களை நாளை(அதாவது இன்று) கொடுப்போம். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அரசுக்கு கவர்னர் உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வித்வத் தாக்கப்பட்டது தொடர்பான காட்சிகள் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதை அரசு மூடிமறைக்கிறது. அதுபற்றி கவர்னரிடம் கூறினோம்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Related Tags :
Next Story