வீடு, வீடாக சேலைகள் வினியோகித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
மங்களூரு வடக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. சேலைகள் வினியோகித்ததாக சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மொய்தீன் பாவா. இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். விரைவில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மொய்தீன் பாவா எம்.எல்.ஏ. நேற்று மங்களூரு வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சூரத்கல் பகுதியில் வீடு, வீடாக சென்று ஒவ்வொரு பெண்களையும் சந்தித்து, சேலைகளை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும் பரவியது. அந்த வீடியோ காட்சியில் அவர் ஒவ்வொரு பெண்களையும் அழைத்து ‘பண்ணி தகோனா’(வாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்) என்று அழைத்து சேலைகளை வழங்குகிறார். இதைப்பார்த்து பரபரப்பு அடைந்த பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியினர் உடனடியாக சூரத்கல் பகுதிக்கு சென்றனர். ஆனால் அதற்குள் மொய்தீன் பாவா அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் சூரத்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக மொய்தீன் பாவா எம்.எல்.ஏ. வீடு, வீடாக சென்று பெண்களுக்கு சேலைகளை வழங்கி உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story