சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் பெங்களூருவுக்கு குடிநீர் கிடைத்துள்ளது
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் பெங்களூருவுக்கு குடிநீர் கிடைத்து உள்ளது என்று சட்டசபையில் சித்த ராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் கூட்டுத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படாமல், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:-
இது 14-வது கர்நாடக சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். கவர்னர் உரையில் அரசு சொன்னது என்ன?, செய்தது என்ன? என்பது பற்றி முழு விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொண்டுள்ளோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் செய்த பணிகளை மக்கள் அங்கீகரித்து உள்ளனர்.
அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. எங்கள் ஆட்சியில் மக்கள் திருப்தியாக, நிம்மதியாக உள்ளனர். மக்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். இதன் அடிப்படையிலேயே நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன். உண்மைகளின் அடிப்படையில் கனவு காண வேண்டும். அந்த கனவுகளை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
பசி இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. ‘அன்ன பாக்ய’ திட்டத்தின் மூலம் அதை நனவாக்கி உள்ளோம். பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்குகிறோம். ஏழை மக்களுக்காக மலிவு விலை உணவகத்தை திறந்துள்ளோம். இதன் மூலம் பசி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பசி வந்தவருக்கு பால், உணவு வழங்க வேண்டும் என்று கவிஞர் சர்வக்ஞர் கூறி இருக்கிறார். இது எங்கள் அரசின் சாதனை என்று சொல்ல மாட்டேன். இது மாபெரும் மக்கள் சேவை ஆகும். ‘அன்ன பாக்ய’ திட்டத்தில் 1.8 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசி கிடைக்கிறது. புதிதாக இன்னும் 15 லட்சம் குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டையை வழங்க முடிவு செய்துள்ளோம்.
30 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கும் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். எனது தாயார் விறகு மூலம் சமையல் செய்வார். அப்போது எழும் புகையால் அவர் கண்ணீர் விடுவார். அந்த கஷ்டத்தை ஏழை மக்கள் படக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஏழைகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர்களை இலவசமாக வழங்குகிறோம்.
காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் பெங்களூருவுக்கு நீர் கிடைத்துள்ளது. அந்த தீர்ப்பை நான் வரவேற்றேன். கர்நாடகம் சார்பில் வாதிட்ட வக்கீல்களை பாராட்டினேன். இந்த பிரச்சினையில் சிலர் அரசியல் செய்ய முயற்சி செய்தனர். தீர்ப்புக்கு முன்பு, இதில் சரியான வாதத்தை கர்நாடக அரசு எடுத்து வைக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். தீர்ப்பு வந்த பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர்.
மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் கர்நாடகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மகதாயி பிரச்சினையில் சிறிது அரசியல் நடந்திருக்கலாம். ஆனால் காவிரி பிரச்சினையை பொறுத்துவரையில் எதிர்க்கட்சிகள் உள்பட எந்த கட்சியும் அரசியல் செய்யவில்லை.
விவசாய விளைபொருட் களுக்கு நல்ல விலை கிடைக்கும் நோக்கத்தில் வேளாண்மை சந்தைகளில் ஒற்றைசாளர சந்தை முறையை கொண்டு வந்துள்ளோம். ஆன்லைன் நடைமுறையை அறிமுகம் செய்து இருக்கிறோம். இதை மத்திய அரசு பாராட்டியது. நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் இத்தகைய முறை அறிமுகம் செய்யப்பட்டது.
கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடப்பது உண்மை தான். முந்தைய ஆட்சி காலங்களிலும் இது நடந்துள்ளது. கடும் வறட்சியால் இந்த தற்கொலைகள் கொஞ்சம் அதிகரித்தன. ஆனால் இந்த ஆண்டு அது குறைந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது. பிரச்சினைக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல. விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அரசு பாடுபட்டு வருகிறது.
அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று விவசாயிகளை இருகைகூப்பி வணங்கி கேட்கிறேன். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவி, குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளுக்கு இலவச கல்வியை அரசு வழங்குகிறது. கர்நாடகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க 1.92 லட்சம் விவசாய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.1,920 கோடி செலவு செய்து இருக்கிறோம்.
70 லட்சம் விவசாயிகளுக்காக விவசாய விளக்கு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறோம். தரிசு நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும். இதற்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி செலவாகும். தெலுங்கானாவுக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும்.
நான் பி.எஸ்.சி. முடித்துவிட்டு எம்.எஸ்.சி. படிப்புக்கு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை. ஊருக்கு சென்று உழவு பணியில் ஈடுபட்டேன். அதன் பிறகு சட்டம் பயின்றேன். ரூ.8 ஆயிரம் கோடி செலவில் 2,600-க்கும் அதிகமான ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். இந்த திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீரை கோலார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொடுக்கிறோம். இது குடிநீருக்கு பயன்படாது. விவசாய பணிகளுக்கு பயன்படும். இதற்கு ரூ.2,450 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம். ரூ.13 ஆயிரம் கோடியில் எத்தினஒலே குடிநீர் திட்டத்தை அமல்படுத்துகிறோம். இதனால் ‘பயலுசீமே’(வறண்ட பகுதிகள்) குடிநீருடன் பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.44 ஆயிரத்து 542 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கி இதுவரை ரூ.7,500 கோடி செலவு செய்து இருக்கிறோம். பா.ஜனதா சொல்வது போல் ‘டேக் ஆப்’ ஆகாத அரசு இவ்வளவு நிதி செலவு செய்ய முடியுமா?. முழுமையான நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.88 ஆயிரம் கோடி செலவு செய்து இருக்கிறோம். நாட்டிலேயே முதல் முறையாக 1.40 கோடி குடும்பங்களுக்கு பொது சுகாதார திட்டத்தை தொடங்க உள்ளோம். கர்நாடகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 13 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம். இது குஜராத்தில் சாத்தியம் ஆகாதது ஏன்?.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story