‘எனது உடலை 6 வயது மகளிடம் காட்ட வேண்டாம்’ தற்கொலை செய்த பெண் டாக்டர் உருக்கமான கடிதம்
விருதுநகரில் தற்கொலை செய்துகொண்ட பெண் டாக்டர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் எனது உடலை 6 வயது மகளிடம் காட்ட வேண்டாம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வருபவர், இருசப்பன். இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜனனி (வயது 32). மனநல முதுநிலை டாக்டரான இவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தனுஷியா என்ற 6 வயது மகள் உள்ளாள்.
இந்தநிலையில் பெண் டாக்டர் ஜனனி வீட்டின் மாடி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாண்டியன்நகர் போலீசார், ஜனனியின் தந்தை டாக்டர் ரவிராமன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜனனி தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
பென்சிலால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், “எனக்கு வாழபிடிக்கவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசையும் இல்லை. அனைத்துமே சூனியமாக தெரிகிறது. இதனால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். நல்ல கணவர், நல்ல குழந்தை, நல்ல பெற்றோர், நல்ல வேலை என அனைத்தும் கிடைத்திருந்தும் எனக்கு மனதில் வெறுமை ஒன்றே மிச்சமாக உள்ளது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இதுவே எனது மரண வாக்குமூலம். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். எனது சாவும், அதன் பின் நடக்கும் நிகழ்வுகளும் யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது. என்னுடைய உடலை முடிந்தவரை எனது மகளுக்கு காட்டவேண்டாம். அம்மா ஊருக்கு சென்றுவிட்டார் என்று கூறிவிடுங்கள்” என்று டாக்டர் ஜனனி உருக்கமாக எழுதியிருந்தார்.

Related Tags :
Next Story