அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:15 AM IST (Updated: 24 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கல்லூரியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி தலைவர் அருண் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் கல்லூரி செயலாளர் சத்தியசீலன், ஒன்றிய செயலாளர் மதன், நகர செயலாளர் சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story