கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:15 AM IST (Updated: 24 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை இந்துசமய அறநிலைய துறை சார்பில் அகற்றப்பட்டன.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை திருவிழந்தூரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலைகள் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்காக இந்த மையத்தின் பாதுகாப்பு மையத்திற்கு சுற்றுச்சுவர்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது மேற்கு பகுதியில் குடியிருப்பவர்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு இடையூறு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) சிவராமகுமார், பரிமளரெங்கநாதர் கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் போலீசார் முன்னிலையில் பரிமளரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பொக்லின் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story