தஞ்சையில், காவடி எடுத்தும், பக்கோடா விற்றும் விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி காவடி எடுத்தும், பக்கோடா விற்றும் தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவடி சுமந்தும், பக்கோடா விற்றுக் கொண்டும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை காவடி எடுக்கவும், பக்கோடா விற்கவும் வைப்பதாக கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் பாதி தொலைவு வந்தவுடன் விவசாயிகள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி காவடி, பக்கோடா போன்றவற்றை கூட்ட அரங்கிற்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று கூறினர்.
இதையடுத்து பல்வேறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், காவடி, பக்கோடாவை கீழே போட்டு விட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டுள்ளது. வாடிய பயிரை கண்டு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் விவசாயிகளை பாதுகாக்க எந்த திட்டத்தையும் மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யவில்லை.
கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி தான் காவடி எடுத்தும், பக்கோடா விற்றும் போராட்டம் நடத்தினோம்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதையும், கடனுக்காக பொருட்களை ஜப்தி செய்வதையும் மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story