21 ஆயிரத்து 53 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வை 21 ஆயிரத்து 53 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.
தூத்துக்குடி,
தமிழ்நாட்டில், நடப்பு ஆண்டுக்கான(2018) பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் வருகிற மார்ச் 1-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ந் தேதி வரை நடக்கின்றன. பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 7-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 16-ந் தேதி வரையும், 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 16-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ந் தேதி வரையும் நடைபெற உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த அரசு பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்திட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று அவருடைய அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;- மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 21 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 21 ஆயிரத்து 748 மாணவ- மாணவிகளும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 23 ஆயிரம் 624 மாணவ- மாணவிகளும் எழுதுகின்றனர். மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் 74 தேர்வு மையங்களிலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 95 தேர்வு மையங்களிலும் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் நடைபெறும் மேல்நிலைப் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வரப்பெற்று, காப்பகத்தில் ஆயுதம் தாங்கிய போலீசாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன், கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேசுவரி, தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் கிறிஸ்டி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சீனி, சங்கரய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story