மாற்றுத்திறனாளிகளுக்கு சென்சார் பொருத்தப்பட்ட ஊன்றுகோல் கலெக்டர் வழங்கினார்
சிறப்பு குறைதீர்வு முகாமில் ‘சென்சார்’ பொருத்தப்பட்ட மிளிரும் ஊன்றுகோலை கலெக்டர் ராமன் வழங்கினார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாமில் ‘சென்சார்’ பொருத்தப்பட்ட மிளிரும் ஊன்றுகோலை கலெக்டர் ராமன் வழங்கினார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 3 சக்கர சைக்கிள், ஸ்கூட்டர், ஓய்வூதியம், வங்கிக்கடன், வேலைவாய்ப்பு, பஸ்பாஸ் உள்பட பல்வேறு உதவிகள் கேட்டு 260 பேர் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் 132 பேர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
இந்த முகாமில் 2 பேருக்கு 3 சக்கர சைக்கிள், ஒருவருக்கு காதொலி கருவி, 2 பேருக்கு ஒளிரும் ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டது.
ஊன்றுகோலில் பேட்டரியுடன் ‘சென்சார்’ போர்டு இணைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும்போது ரோட்டில் பள்ளம், தண்ணீர் போன்றவை இருந்தால் அதன் அருகில் செல்லும்போது ஊன்றுகோலில் அதிர்வு ஏற்படும்.
நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் இருந்து பஸ்சில் வந்து இறங்கி அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சிரமப்பட்டு வந்தார்கள். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்கு பேட்டரி கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதுபோன்று வேலூரில் இல்லை. மேலும் தற்போது கோடை வெயில் தொடங்கி விட்ட நிலையில் நேற்று குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மக்கள்குறைதீர்வு கூட்டம், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்வு முகாமின்போது வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு பேட்டரி கார் வாங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர்.

Related Tags :
Next Story