காமத்திபுராவில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது
காமத்திபுராவில், துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தையை துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு வந்தபோது, போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.
மும்பை,
மும்பை நாக்பாடா போலீசார் நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணியளவில் காமத்திபுரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிவதை கவனித்த போலீசார் அவரை நிற்கும்படி கூறினார்கள். இதனால் பயந்துபோன அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் அதே பகுதியை சேர்ந்த அரிபீன் செய்யது(வயது21) என்பது தெரியவந்தது. இந்த நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்து சுற்றி கொண்டிருந்ததற்காக தன்னை மன்னித்து விடும்படி போலீசாரிடம் கூறினார். இருப்பினும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனையிட்டனர்.
அப்போது, அவரது கால்சட்டை பைக்குள் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்த னர். மேலும் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில், அவர் அந்த துப்பாக்கியை வைத்து தனது தந்தையை மிரட்டியிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
ஜே.ஜே. மருத்துவமனையில் வார்டுபாயாக வேலை பார்த்து வரும் தனது தந்தை அன்வர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பிரச்சினை தொடர்பாக தன்னை அடித்து விட்டதாகவும், இதற்காக அவரை பழிவாங்க உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த துப்பாக்கியை வாங்கி வந்து, அவரை சுட்டுவிடுவதாக மிரட்டிவிட்டு வந்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story