நேர்மை, உண்மை ஆகியவற்றின் மூலம் ஊழல் இல்லாத மாநிலத்தையும், இந்தியாவையும் மாணவர்கள் உருவாக்க வேண்டும் முன்னாள் எம்.பி. தருண் விஜய் பேச்சு


நேர்மை, உண்மை ஆகியவற்றின் மூலம் ஊழல் இல்லாத மாநிலத்தையும், இந்தியாவையும் மாணவர்கள் உருவாக்க வேண்டும் முன்னாள் எம்.பி. தருண் விஜய் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2018 2:45 AM IST (Updated: 24 Feb 2018 8:16 PM IST)
t-max-icont-min-icon

நேர்மை, உண்மை ஆகியவற்றின் மூலம் ஊழல் இல்லாத மாநிலத்தையும், இந்தியாவையும் மாணவர்கள் உருவாக்க வேண்டும் என பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில், முன்னாள் எம்.பி. தருண் விஜய் பேசினார்.

திசையன்விளை,

நேர்மை, உண்மை ஆகியவற்றின் மூலம் ஊழல் இல்லாத மாநிலத்தையும், இந்தியாவையும் மாணவர்கள் உருவாக்க வேண்டும் என பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில், முன்னாள் எம்.பி. தருண் விஜய் பேசினார்.

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா


நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரி 8–வது ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முத்துராஜன், செந்தில் ராஜன், சுப்புராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் சுந்தரபாண்டி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கந்தவேல் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் முன்னாள் எம்.பி. தருண் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:–

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து வந்து இந்த கல்லூரி ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்வியல் நெறிமுறைகள் அனைத்தும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் நான் தமிழ்த்தாயின் புதல்வனாக உள்ளேன். தமிழ்நாடு நேர்மையான, தூய்மையான தலைவர்களை கொண்ட நாடு. தமிழக மக்கள் மிகுந்த பெருமை உடையவர்கள். திருவள்ளுவர், ஒளவையார், ஆண்டாள், பாரதியார் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தியாவுக்கே முன் உதாரணம்

நேர்மை, உண்மை ஆகியவற்றின் மூலம் ஊழல் இல்லாத மாநிலத்தையும், இந்தியாவையும் மாணவர்கள் உருவாக்க வேண்டும். தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு தான் இந்தியாவுக்கே முன் உதாரணமாக இருக்கிறது. மத்தியில் பிரதமர் மோடி ஊழல் இல்லாத நல்லாட்சி நடத்தி வருகிறார். அந்த நல்லாட்சி நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு தமிழக பாரதீய ஜனதா மாணவரணி துணை தலைவர் சதீஷ்குமார் பான்சிலே, தருண் விஜய் ஆகியோர் பரிசு வழங்கினர். கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தொழில் அதிபர் ஆண்டோ, அரசூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வைகுண்டராஜன், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், வேல்முருகன், பேராசிரியர்கள் ஜூலியட், பீட்டர் ஆனந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story