செல்பி எடுக்க முயன்ற வாலிபரை தூக்கி வீசிய காட்டு யானை
தேன்கனிக்கோட்டை அருகே செல்பி எடுக்க முயன்ற வாலிபரை காட்டு யானை தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் சந்தாபுரத்தைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் வில்லியம்ஸ் நேற்று தனது மனைவி, நண்பர் சந்தோஷ் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்திற்கு வந்தார்.
அங்கு உறவினர்களை சந்தித்து விட்டு மாலை மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். வட்டவடிவு பாறையில் முகாமிட்டிருந்த யானை கும்பல் ஒன்று மரக்கட்டா காட்டிற்கு செல்ல ரோட்டை கடந்து கொண்டிருந்தது. இதனால் அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த நேரம் வில்லியம்ஸ், அவரது மனைவி ஜெனிபர், சந்தோஷ் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் அந்த இடத்தின் அருகில் வந்து நின்றனர். காட்டு யானைகள் சாலையை கடந்து கொண்டிருந்ததை பார்த்த வில்லியம்ஸ் அவற்றுடன் செல்பி எடுக்க முயன்று செல்போனை கையில் தூக்கி உயர்த்தி பிடித்தார். அப்போது ஒரு காட்டு யானை வேகமாக ஓடி வந்து வில்லியம்சை துதிக்கையால் தூக்கி வீசியது.
இதில் வில்லியம்சுக்கு, கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பினர். இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த வில்லியம்சை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். யானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை காட்டு யானை தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story